உங்களுடைய முழு ஆற்றலையும் அடையத் தேவையான முழுமையான கையேடு ! ‘
தனிநபர் வளர்ச்சி விதிகள் 15 ‘ என்ற இந்நூல் , ஜான் மேக்ஸ்வெல்லின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று . ஒரு தனிநபர் என்ற முறையில் நீங்கள் எவ்வாறு மகத்தான வளர்ச்சியை அடைவது என்பதை மேக்ஸ்வெல் இந்நூலின் மூலம் கற்றுக் கொடுக்கிறார் .
அவர் இந்நூலில் வலியுறுத்துகின்ற விஷயங்கள் பின்வருமாறு : .
நீங்கள் எவ்வளவு தனித்துவமானவரோ , உங்கள் வளர்ச்சி அவ்வளவு தனித்துவமானது .
நீங்கள் உங்கள் குறிக்கோளைக் கண்டுபிடிக்க விரும்பினால் , சுயவிழிப்புணர்வில் நீங்கள் வளர்ச்சியுற வேண்டும் .
ஒரு சிறந்த மனிதராக ஆவதற்கு , நீங்கள் உங்கள் நடத்தையில் வளர்ச்சியடைய வேண்டும் . .
ஒரு சிறந்த வாழ்க்கைத் துணைவராகவோ அல்லது பெற்றோராகவோ ஆவதற்கு , உங்கள் உறவுகளில் நீங்கள் வளர வேண்டும் .
உங்களுடைய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு , பணம் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய அறிவில் நீங்கள் வளர்ச்சி வேண்டும் .
உங்கள் ஆன்மாவிற்குச் செறிவூட்டுவதற்கு , ஆன்மீகரீதியாக நீங்கள் வளர வேண்டும் .
வளர்ச்சி உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது . நீங்கள் தினமும் செய்கின்ற ஏதோ ஒன்றை நீங்கள் என்றைக்கு மாற்றுகிறீர்களோ , அன்றுதான் உங்கள் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது .