Showing 1–16 of 18 results

 • SAVE 7%
  Add to cart

  அடையாள மீட்பு / Adaiyala Meetpu

  180 167

  தேசிய , சனநாயக , மனித குல விடுதலை இதன் மையம் . எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல் , ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடனான , புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும் . மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது ; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது . அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி . போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது . போராட்டமே நம்மை உருவாக்குகிறது . போராட்டத்தில் தான் நமது வரலாறு , மொழி , இருப்பு தங்கியுள்ளது . அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும் ; எது செய்தாலும் இருக்கும் . அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம் : நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல : உலகை மாற்றக் கனவு காண்பவர்கள் .

 • SAVE 7%
  Add to cart

  அரசியல் / Arasiyal

  310 288
 • SAVE 7%
  Add to cart

  இந்தியா 2020 / India 2020

  400 372
 • SAVE 7%
  Add to cart

  தீப்பற்றிய பாதங்கள் / Theeppatriya Paathangal

  550 512
  பெருநகரப் பல்கலைக்கழகங்களின் கல்விப்புல இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு ‘ ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கீழிறங்கிவந்து பேசுகிறேன் என்று பெருமிதம் கொள்ளாததாக இருக்கிறது நாகராஜின் குரல் . இது ஒதுக்கப்பட்டவரின் சுயவெளிப்பாட்டு முறையாகவும் , தன்னாட்சி கொண்ட குரலாகவும் இருக்கிறது . இது அவர்களுக்கான உலகத்துக்குள் இருந்து பேசி நமக்கான , நம் உலகத்துக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்கிக்கொடுக்க முயல்கிறது . நாகராஜின் உலகத்தில் உடமையிழந்தவர்களும் அதிகாரமற்றவர்களும் நம்முடைய இரக்கத்துக்குக் கொஞ்சமும் இடம் கொடுப்பதில்லை ; நம்முடைய பரிதாபங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுமில்லை . அவர்களிடம் திடமான . ஏறக்குறைய உக்கிரமான , தன்னம்பிக்கை காணப்படுகிறது . செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும் . பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும் , மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குகிறார் நாகராஜ் . ஒரு சமயத்தில் நம் காலத்துக்குப் பொருந்தக்கூடிய அரசியல் ரீதியான கோட்பாட்டு ரீதியான புலங்களுக்கான தேடலாக இது இருந்தது . பின்பு , பரந்த தளத்தில் மீளிணக்கத்துக்கான தத்துவார்த்த தேடலாகக் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றம் கொள்கிறது . இதுவே , தலித்துகளுக்கான அதிகாரப் பகிர்வையும் தீண்டாமை என்ற சாபத்திலிருந்து உயர்சாதிகளைத் விடுவிப்பதையும் தன் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்த காந்திக்கு நெருக்கமாக நாகராஜைக் கொண்டுவருகிறது .
  அஷிஸ் நந்தி.
 • SAVE 7%
  Add to cart

  தீர்ப்பு / Theerpu

  399 371
  ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது . நமது நனவு நிலைக்கு உரித்தானது அது . நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது , நமது மனங்களை ஊக்குவிக்கிறது ; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது . சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ , அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம் ; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம் .
  மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் , இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார் . இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை .
  மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில் , நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார் , அரசியல்வாதியல்ல .
 • Out Of Stock SAVE 7%
  Read more

  இந்தியா எதை நோக்கி ? / India ethai nooki ?

  220 205
  சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர் , கோவிந்த் பன்சாரே , எம்.எம்.கல்புர்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது . கருத்துரிமை , பேச்சுரிமை துப்பாக்கிமுனைகளில் கேள்விக் குறிகளாகின்றன , அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார் . இந்தியாவின் பிரதமர் மோடியோ தனது நீடித்த மௌனங்களால் இவற்றுக்கு ஆதரவான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறார் . இவற்றைக் கண்டித்து எழுத்தாளர்கள் , கலைஞர்கள் , விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளைத் திருப்பியளிக்கும்போது அரசியல் பின்னணி ‘ என ஏகடியம் செய்யப்படுகின்றனர் .
  இந்த அநாகரிகர்களுக்கெதிராக , நமது நாட்டின் பன்முகத்தன்மையை , மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புகளைப் பாதுகாக்க இவற்றில் நம்பிக்கைகொண்ட அனைவரும் களமிறங்கவேண்டிய தருணம் இது . அந்தப்போராளிகளின் களத்தில் இந்நூல் ஒருகருவியாக பயன்படும் என்ற நம்பிக்கையில் தமிழில் இதனை வெளியிடுகிறோம் .
 • Out Of Stock SAVE 7%
  Read more

  இந்தியா ஏமாற்றப்படுகிறது / India misinformed : The True story

  320 298
  அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது . கும்பல்படுகொலைகள் , கும்பல் வன்முறைகள் , அவதூறுகள் , கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன . இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன .
  ” இந்தியா ஏமாற்றப்படுகிறது ” என்னும் இந்நூல் ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு , பிரதீக் சின்ஹா , மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது . வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி , அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது .
  இந்துக்களின் எதிரியா ஜவஹர்லால் நேரு ?
  உலகிலேயே மிகப்பெரிய ஊழல்வாதப் பிரதமர்களில் ஒருவராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டாரா ?
  உலகிலேயே நான்காவது பெரிய பணக்காரப் பெண்மணியா சோனியா காந்தி ?
  தானொரு ‘ இந்து அல்லாதவன் ‘ என்று சோம்நாத் கோவிலின் பதிவேட்டில் எழுதிவைத்தாரா ராகுல் காந்தி ?
  மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் பிரச்சாரம் செய்யப்படுகிற மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு , உண்மையிலேயே வலுவான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவா?
  புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய வாதங்களை முன்வைத்து , வதந்திகளை உடைத்தெறிந்து , உண்மைகளைப் பேசுகிறது ” இந்தியா ஏமாற்றப்படுகிறது ” என்கிற இந்நூல் .