ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும் , கதைக்கருவிலும் , சொல்லும் முறையிலும் , மொழி நுட்பத்திலும் , கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது . இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன . இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் .