Showing the single result
-
Add to cart
நுண்ணுயிர் எதிரி / Nunnuyir Ethiri
₹150₹140தீநுண்மித் துயரம் என்று தணியும் இந்த சோகம் என உலக மக்கள் அனைவரையும் அல்லல் பட வைத்துள்ளது கொரோனா என்னும் நோய் தொற்று . மூன்றாவது உலகப்போர் என்று சொல்லும் அளவுக்கு கத்தியின்றி யுத்தமின்றி மனித இனத்தை மரணத்தில் தள்ளி வருகிறது இந்தப் பெருந்தொற்று .கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் . பொருளாதாரப் பாதிப்புகளோடு உள நலமும் பாதிக்கப்பட்டு , வாழ்க்கையே கேள்விக்குறியாக செய்வதறியாது தவிக்கின்றனர் .” இது நிரந்தரம் அல்ல , மீண்டு விடலாம் ” என்ற நம்பிக்கை தரும் வகையில் கொரோனா பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு , ” நுண்ணுயிர் எதிரி ” என்ற நூலைத் தந்துள்ளார் உளநல ஆலோசகர் கே.நித்தியானந்தன் .ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய ஆதாரங்களைத் திரட்டி , எளிய நடையில் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி எழுத்து நடையைக் கையாண்டிருப்பது சிறப்பு . கொரோனா பெருந்தொற்றின் துயரத்திலிருந்து மீண்டு வர வழி காட்டுகிறது இந்நூல் . ஓர் சமூக உளவியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இந்நூல் நல்ல மாற்றத்தைத் தரும் என்று நம்பலாம் .நந்தவனம் சந்திரசேகரன்