Showing the single result
-
Add to cart
இடது திருப்பம் எளிதல்ல / Edathu Thiruppam Elithalla
₹260₹242தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத் 2014 பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல் .” ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை , ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம் ” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய் பிரசாத் , அதற்கொப்ப இடதுசாரிகளின் இன்றைய நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகின்றார் .கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப்படலாம் . பலமுறை தவறான வழியில் சென்றுவிடலாம் . ஆனால் போராட்டத்தின் மூலமாக சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று , விஸ்வரூபமாக மீண்டும் எழும் . என்பார் கார்ல் மார்க்ஸ் .” இப்படி நடந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் எனது சார்பு இருக்கிறது . இதில் பாரபட்சமற்ற தன்மை என்ற பாசாங்கு கிடையாது . ஆனால் இது எதார்த்தத்தை ஒட்டியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன் ” எனக் கூறும் விஜய் பிரசாத் என்மீதும் பிறர் மீதும் எனக்கு ஒரேவிதமாக இரக்கம்தான் என்று கூறி , இரக்கமற்ற துல்லியத்துடன் இடதுசாரிகளின் நிலையை , அவர்கள் வந்த பாதையை , சந்தித்த சவால்களை , அவற்றை எதிர்கொண்டவிதத்தை எல்லாம் வரலாற்றுப் பின்புலத்துடன் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார் .