Showing all 4 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரகசியம் / The Secret

    399 371
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கதாநாயகன் / Hero

    599 557
    உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது . இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர் . நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் . நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை , நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது . அந்தப் பயணம் பற்றியதே இந்நூல் .
    இப்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னிரண்டு வெற்றியாளர்கள் , நம்புதற்கரிய தங்கள் கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு , நீங்கள் உங்களுடைய மாபெரும் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்தோடும்தான் பிறந்திருக்கிறீர்கள் என்பதையும் , அப்படி வாழ்வதன் மூலம் நீங்கள் உங்கள் பிறவி நோக்கத்தை அடைந்து இவ்வுலகை ” மாற்றுவீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறார்கள் .
    முன்பு ஒரு கதாநாயகன் இருந்தான் . ‘
    கதாநாயகன் ‘ குறித்து மேலும் தகவலறிய
    இணையத்தளத்திற்கு வருகை தாருங்கள் .
  • SAVE 7%
    Add to cart

    சக்தி / The Power

    599 557
  • SAVE 7%
    Add to cart

    மாயாஜாலம் / The Magic

    350 326

    கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு புனித நூலில் புதைந்து கிடந்த வார்த்தைகள் , அதைப் படித்தப் பெரும்பாலானோருக்குத் திகைப்பூட்டுவதாகவும் , குழப்பமூட்டுவதாகவும் , முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது . அந்த வார்த்தைகள் உண்மையில் ஒரு புதிர் என்பதையும் , நீங்கள் அப்புதிரை விடுவிக்கும்பட்சத்தில் ஒரு புதிய உலகம் உங்கள் கண்முன்னே விரியும் என்பதையும் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே அறிந்து வைத்திருந்தனர் . மாயாஜாலம் என்னும் இப்புத்தகத்தில் , ரோன்டா பைர்ன் , வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார் . இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 28 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார் . நீங்கள் யாராக இருந்தாலும் சரி , நீங்கள் எங்கிருந்தாலும் சரி , உங்களுடைய தற்போதைய வாழ்வுச் சூழல் எப்படியிருந்தாலும் சரி , இந்த மாயாஜாலம் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றப் போகிறது .