Showing all 9 results
-
Read more
ஊர்சுற்றிப் புராணம் / Oorsutri Puranam
₹130₹121‘ இந்தியப் பயண உலகின் தந்தை ‘ எனப்போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும் , வெவ்வேறு ரசனைகளுடனும் கலாபூர்வமாகவும் ஆச்சரியங்களோடும் அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிகமிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல் .
உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது தனது தாழ்மையான கருத்தாகும் ‘ என அறிவித்துக்கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல் , புதிதாக ஊர் சுற்றப் புறப்படுபவர்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடாகும் . -
Read more
சிந்து முதல் கங்கை வரை / Sindhu Muthal Gangai Varai
₹290₹270சமூகம் , தத்துவம் , வரலாறு , அறிவியல் , பயணநூல் , வாழ்க்கை வரலாறு , நாடகம் , கட்டுரை , ஆய்வு எனப் பன்முகத் தளங்களில் தீவிர ஈடுபாட்டுடன் சுற்றிச் சுழன்று வந்த தத்துவார்த்த சிந்தனையாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய இரண்டாவது நாவல் .வைசாலிக் குடியரசு பற்றிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில் , வைசாலிக் குடியரசின் பிரதம சேனாபதி சிம்மனின் வாழ்க்கை சிறிதாகவும் அவன் காலத்து உலகத்தை முழுமையாகவும் உயிர்த்துடிப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது .கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு வாக்கிலான சிம்மனின் கால வரலாற்றை பாட்னா மியூசியத்திலுள்ள 1600 செங்கற்களில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளிலிருந்து கண்டுகொண்டதாகக் கூறியுள்ளார் ராகுல்ஜி -
Read more
ரிக் வேத கால ஆரியர்கள் / Rick Vethakala Aariyargal
₹220₹205ஆரிய இனக்குழுக்கள் மற்றும் வருணங்களைப் பற்றியும் விவரிப்பதுடன் இந்தியாவுக்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பாவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் பரப்பியதையும் ராகுல்ஜி விளக்கமாகவும் விரிவாகவும் இந்நூலில் அலசியுள்ளார் .நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலில் ஆரியர்கள் இந்தியா வந்தபிறகு ரிக் வேதம் பிறந்தது . ஆரியர்கள் மதுவருந்தியது , மாமிசம் உண்டது . அவர்களது சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன . ஆரியர்களின் குல கோத்திரங்கள் , அவர்கள் கண்ட அரசியல் அமைப்பு முறை , கல்வி கற்கும் முறை , நோய் தீர்க்கும் மருத்துவம் , ஆடை அணிகலன்கள் , பொழுதுபோக்கு , இசை , நடனம் , நாட்டியம் , சூதாட்டம் , வணங்கிய தெய்வம் , அவர்களின் வேளாண்மை , வணிகம் போன்றவையும் விளக்கமாக இடம்பெற்றுள்ளன . -
Read more
விஞ்ஞான லோகாயத வாதம் / Vingnana Logayathavatham
₹135₹126ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர் . கல்விக்கடல் , வற்றாத அறிவு ஊற்று . நுண்மான் நுழைபுலம் மிக்கவர் . ஐம்பது ஆண்டுகள் , நாள்தோறும் எழுதிய வண்ணமிருந்தவர் . அவர் எழுதிய அறிவார்ந்த கட்டுரைகள் தாங்கி ஆண்டு , அரையாண்டு , காலாண்டு , மாத – வார – நாளிதழ்கள் பல வெளிவந்தன .மார்க்சிய – லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப்பெற்று , இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும் , மெய்ப் பொருள் வகைகளையும் , சமயங்களையும் குறித்து நூல்களாக வடித்த இவரது இந்நூல் காரணகாரிய வாதம் , உண்மை , தலைவிதி தத்துவம் , மூட நம்பிக்கைகள் , பூதங்களும் இயக்கங்களும் , குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன் பல்வேறு விவாதக் களங்களையும் உருவாக்கிச் செல்கிறது .