Showing the single result
-
Add to cart
போர்ப் பறவைகள் / Por paravaigal
₹900₹837ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன . சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டு சென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு , மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது .ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட அம்மா , மகளான யங் சாங் ஆகிய ஒரே குடும்பத்தில் தோன்றிய மூன்று தலைமுறைப் பெண்மணிகளின் மூலமாக , இந்நூலாசிரியர் யங் சாங் இருபதாம் நூற்றாண்டு சீன வரலாற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் .மயிர்க்கூச்செறிய வைக்கும் ஓர் ஒப்பற்ற படைப்பு இது . இந்நூலின் கதை நகர்ந்த விதம் மறக்கமுடியாத ஒன்றாக மனதில் பதிந்து விட்டது . எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஓர் அபூர்வக் காப்பியமாகவே காணப்படுகிறது .போர்ப் பறவைகள் என்னும் இந்நூல் என்னை ஐந்து வயதுக் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளிவிட்டது . நிலையான சமூக வரலாற்றின் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு குடும்ப வரலாறு இது .மார்ட்டின் ஏமிஸ் இண்டிபெண்டண்ட் ஆன் சண்டேவாழ்க்கையின் வேதனைகளை வெளிப்படுத்திய இந்நூல் என் மனதைத் தொட்டுவிட்டது . ஒரு தேசம் மூளைச்சாவு அடைந்த விவரத்தினை விவரிக்கும் இந்நூல் எப்போதும் என்மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் .பேலர்ட்சண்டே டைம்ஸ்