Showing the single result
-
Read more
திப்புசுல்தான் / History of Tipu Sultan
₹600₹558இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் , முதல் பத்தியில் , முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர் , திப்புவுடையது . கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை , மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு , இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது . அதேவேளையில் , திப்புவின் அரசாங்கமும் , அதை அவர் நடத்திய விதமும் , அவரது இராணுவமும் , அவர் செய்த சீர்திருத்தங்களும் , மதக் கொள்கைகளும் , தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும் , சமூக சமத்துவமும் , அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன . பல்வேறு ஆய்வுகளின் மூலம் , திப்புவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை , சமூகத்திற்கு தனது பங்களிப்பாக இந்நூல் மூலம் தந்திருக்கும் மொஹிபுல் ஹசன் , கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் . முதுபெரும் வரலாற்றாசிரியர் . அலிகார் பல்கலைக்கழகத்திலும் , காஷ்மீர் பல்கலைக்கழகத்திலும் தனது பணியைத் தொடர்ந்தவர் . புதுடெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவியவரும் , அதன் முதல் பேராசிரியரும் ஆவார் .