Showing all 2 results
-
Read more
கசார்களின் அகராதி ஆண் பிரதி / Dictionary Of The Khazars Male Edition
₹500₹465சர்வதேச அளவில் மிகச்சிறந்த விற்பனையைக் கொண்ட புத்தகம் , கசார்களின் அகராதி நியூயார்க் டைம்ஸ்சில் 1988 ஆம் வருடத்தின் சிறந்த புத்தகங்களுள் ஒன்றெனக் குறிப்பிடப்பட்டது . ஆண் மற்றும் பெண் என இரண்டு பிரதிகளை உடையது . அவை ஒன்றையொன்று ஒத்தவை என்றாலும் பத்தொன்பது முக்கியமான வரிகளில் வேறுபட்டவை அகராதி என்பது கசார்களின் கற்பனையான அறிவுப் புத்தகம் . இவர்கள் ஏழு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையே ட்ரான்சில்வேனியாவைத் தாண்டியதொரு நிலப்பரப்பில் தழைத்திருந்த இனம் . மரபார்ந்த கூறுமுறை மற்றும் கதையமைப்பைத் தவிர்த்துவிட்ட அகராதி வடிவிலான இப்புதினம் உலகின் முப்பெரும் மதங்களது அகராதிகள் ஒன்றிணைந்து உருவானது . இதன் பதிவுகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையே தவ்விச் செல்பவை . கட்டுப்பாடற்ற மூன்று மதிநுட்பமுடையவர்கள் , நச்சு மையினால் அச்சிடப்பட்ட புத்தகம் , முகம் பார்க்கும் கண்ணாடிகளால் நிகழும் தற்கொலை , பெரும்புனைவாய் ஓர் இளவரசி . ஒருவரின் கனவுக்குள் உட்புகுந்து செல்லக்கூடிய குறிப்பிட்டதொரு இனத்தின் பூசாரிகள் , இறந்துவிட்டவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையே உருவாகும் காதல் என இன்னும் பலவற்றை உள்ளடக்கியது இப்புதினம் .The New York Timesஇதன் கட்டமைப்பின் புதுமை மற்றும் உருவகங்களில் அமைந்துள்ள நகைச்சுவையான படைப்புத்திறம் உள்ளிட்ட அனைத்துமே உணர்ச்சிமிக்க , வெகுகொண்டாட்டமான வாசிப்பு அனுபவம் . “நியூயார்க் டைம்ஸ் புத்தக விமர்சனம்The Washington Post” போர்ஹேஸ் அல்லது கார்சியா மார்க்வெஸ் போல . பாவிச்சிற்கு ) தன்னுடைய செப்பிடுவித்தை கொண்ட எழுத்திற்கு எவ்வாறு அதியற்புதமான . வெகுநுணுக்கமான சித்திரங்கள் மற்றும் மனம் மயக்கும் நிகழ்வுகளால் வலுச்சேர்க்க வேண்டுமென்று தெரிந்திருக்கிறது . “வாஷிங்டன் போஸ்ட் புக் வேர்ல்ட் -
Add to cart
கசார்களின் அகராதி பெண் பிரதி / Dictionary Of The Khazars Female Edition
₹500₹465பெர்ஃப்யூம் நாவலுக்குப்பிறகு அதிகம் பேசப்பட்ட ஐரோப்பிய இலக்கிய வெளிப்பாடு . அடுத்தடுத்து பலநாடுகளில் விமர்சனரீதியில் ஆரவாரமான வெற்றியும் மிகச்சிறந்த விற்பனையையும் ஒருங்கே பெற்றது . கசார்களின் அகராதி வியப்புக்குரிய திறத்தோடு புனைவின் வழக்கமான எல்லைகளைத் தகர்த்து எறிந்தவொரு எழுத்தாளரின் சர்வதேச அறிமுகம் எப்படியிருக்குமென அடையாளமிடுகிறது . இது முழுமையான ஓர் உலகம் குறித்த மற்றும் தொலைந்துவிட்ட சிறந்த மனிதர்களைப் பற்றிய புதினம் . இதுவோர் அறிவின் புத்தகம் . நிகழ்காலத்தைப் பற்றியது மற்றும் சிலநேரங்களில் எதிர்காலத்தைப் பற்றியதும் , அதனால்தான் ஆயிரத்தி நூறு வருடங்களுக்கு முன்பிருந்து தொடங்குகிறது . இது மிகச்சிறந்த ( மற்றும் கட்டுக்கடங்காத ) மூன்று அறிவாளிகளைப் பற்றியது – ஒரு கிறிஸ்தவர் , ஒரு யூதர் , ஒரு மொஸ்லம் – உலகம் எவ்வழியிலிருக்க வேண்டுமெனும் இவர்களின் விவாதம் முடிவுறவேயில்லை . மலைக்கச்செய்யும் தத்துவத்தினால் மூடப்பட்ட மர்மம் இது . மர்மத்தில் பொதியப்பட்ட அரேபிய இரவுகளின் காதற்புனைவு . காதற்புனைவில் பொதியப்பட்ட பல்வேறு கொலைக் கதைகள் . ரகசியங்களில் சுருட்டப்பட்டுள்ள ஒளியூட்டம் குறும்பாகச் சீண்டும் அறிவார்ந்ததொரு விளையாட்டு மற்றும் ஒரு வியப்பூட்டும் சாகசம் . இதன் ஆகச்சிறந்த பாத்திரங்கள் காணாமல் போகிறார்கள் , பிறகு அறியமுடியாதவொரு மாறுவேடம் புனைந்து மறுபடி தோன்றுகிறார்கள் . பல சாத்தான்கள் வருகின்றன . ரத்தக்காட்டேரிகளும் வருகின்றன . எதிராளியை உறக்கத்தில் தொடரும் ஒரு குழுவின் பூசாரிகள் , ஏனெனில் அவர்கள் கனவை வேட்டையாடுபவர்கள் . இது இரண்டு பிரதிகளாக வருகிறது , ஒன்று ஆண் மற்றொன்று பெண் , இரண்டும் பதினேழு ( முக்கியமான ) வரிகளில் மட்டுமே வேறுபடுகின்றன . வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் . ஒரு கடவுச்சீட்டைப்போல கசார்களின் உலகத்தில் அவர்களது பயணம் அவர்களுடைய தேர்வைப் பொறுத்து மாறுபடும் . இரண்டு வகையிலும் , காதல் , மரணம் மற்றும் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அத்தனை சாகசத்திற்கான சாத்தியக்கூறுகளும் கொண்ட புதினத்திற்குள் தங்களை இழக்க விரும்புபவர்கள் பாவிச்சைக் கையிலெடுத்து மூழ்கலாம் . அவர்கள் மெய்மறந்து பரவசத்திற்குள்ளாவார்கள் .