Showing all 11 results
-
Add to cart
Ashokar/அசோகர்
₹300₹279அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே
வாலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர்
என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை
ஒரு நவன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டு
கின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த
மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத்
திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம்.
தம்மோடும் நமக்குப் பிறகு வரும் சந்ததியினரோடும்
விரும்பியதால்தான் தூண்களிலும்
கற்களிலும் தன் சொற்களை விட்டுச்சென்றிருக்கிறார்
அசோகர். அவர் இதயம் எவ்வளவு அகலமானது,
அவர் கனவு எவ்வளவு அற்புதமானது என்பதை அவர்
கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
கடவுள், மொழி, சாதி, இனம், சமயம், கோட்பாடு
எதுவும் பொருட்டல்ல. எல்லோரும் சமம். எல்லோரும்
என் குழந்தைகள் என்று அறிவிக்கும் அசோகருக்கு
இணையாக வேறு எவரைச் சொல்லமுடியும்
நம்மால்? நிலத்தையல்ல, மக்களின் இதயத்தையே
வென்றெடுக்க விரும்புகிறேன். அதுவும் கருணையால்
மட்டும் என்கிறார் அவர்.
அசோகரையும் அவர் வாழ்ந்த காலத்தையும்
விரிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் அறிமுகப்
படுத்துகிறார் மருதன். தனித்து மின்னும் நட்சத்திரம்
என்று உலகம் அவரைக் கொண்டாடுவதற்கான
காரணங்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன. -
Add to cart
India Kandupidikkapatta Kathai/இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
₹475₹442அந்நியர்களின் கண்கள் வழியே விரியும் இந்தியாவின் வரலாறு. உலகின் பல மூலைகளிலிருந்து பெருங்கனவோடு புறப்பட்டு வந்து இந்தியாவைக் கண்டும் உணர்ந்தும் வியந்தும் எழுதியவர்களின் கதை. முழுக்க அயலவரின் பார்வையில் இருந்து இந்தியாவின் 2,500 ஆண்டுகால வரலாறு கண்முன் விரிகிறது. பண்டைய கிரேக்கர்களின் இந்தியா, சீன பௌத்தர்களின் இந்தியா, ஐரோப்பியர்களின் இந்தியா மூன்றும் இடம்பெற்றுள்ளன. மெகஸ்தனிஸ், அலெக்சாண்டர், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்கோ போலோ, இபின் பதூதா என்று தொடங்கி பலர் நம்மோடு உரையாடுகிறார்கள். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் சாதி, நம் வழிபாடு, நம் நம்பிக்கை, நம் மூடநம்பிக்கை, நம் தத்துவம், நம் போர், நம் காதல், நம் இலக்கியம், நம் கனவு என்று அனைத்தையும் ஆராய்கிறார்கள். ஜூனியர் விகடனில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூலாக்கம்.
-
Read more
இரண்டாம் உலகப் போர் / Irandam Ulaga Por
₹325₹302மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை , குரூரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் . உயிரிழப்பு , அறுபது மில்லியன் முதல் எழுபது மில்லியன் வரை . போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் ஆசியா , அமெரிக்கா , ஆப்பிரிக்கா என்று பரவி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்தது .சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர் . சிலருக்குத் தற்காப்பு யுத்தம் . சிலருக்கு பழிவாங்கல் . சிலருக்கு விடுதலைப் போர் . இன்னும் சிலருக்கு , இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம் . ஹிட்லரோடு தொடங்கி ஹிட்லரோடு முடிந்துவிட்ட போர் அல்ல இது . திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல . மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு , தெளிவாகத் திட்டமிடப்பட்டு , தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம் .அரசாங்கங்கள் சரிந்தன . புதிய தேசங்கள் உருவாகின . உலக வரைபடம் மாறியது . இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்திருக்கும் என்று சொன்ன ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் .அரசியல் , சமூக , வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து , அலசுகிறார் மருதன் .