Showing all 9 results
-
Add to cart
அஞ்ஞாடி / Agngnaadi
₹1,100₹1,023கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான் . ‘ அஞ்ஞாடி … ‘ தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல் …பூமணியின் மொழிக் கட்டுப்பாடு . பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலைசெய்து கொண்டிருப்பதால் ‘ சொகமாக ‘ – நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது – நாவலை வாசித்துக்கொண்டே போகலாம் . இதுதான் மொழிக்கு , பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை . ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்ப இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது . -
Add to cart
நைவேத்யம் / Naivethyam
₹160₹149தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் . தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு . மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம் .சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் . இவரது நூல்கள் ஆங்கிலம் , இந்தி , வங்காளம் , பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் . தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார் .தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு ‘ கருவேலம் பூக்கள் ‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் . அது தமிழக அரசு விருது பெற்றது . -
Add to cart
பிறகு / Piraku
₹275₹256பிறகு ‘ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம் . பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது . வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது . கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி , காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் . நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது .தேவிபாரதி