Showing all 7 results
-
Read more
காலை எழுந்தவுடன் தவளை / Eat That Frog
₹150₹140உங்களுடைய செய்யப்பட வேண்டிய வேலைகள் ‘ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை , இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை . வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை . முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி , அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர் . அவர்கள் முதலில் தங்கள் தவளைகளை உட்கொண்டுவிடுகின்றனர் .காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக , உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் உட்கொண்டுவிட்டால் , அன்று அதைவிட மோசமான வேறு எதுவொன்றையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்ற நிம்மதியோடு உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் உங்களால் வேலை செய்ய முடியும் என்ற பழைய கூற்று ஒன்று உள்ளது . உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்ற , ஆனால் உங்கள் வாழ்வின்மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தைக் கையாள்வதைக் குறிப்பதற்கு , ‘ ஒரு தவளையை உட்கொள்வது ‘ என்ற உருவகத்தை பிரையன் டிரேசி இந்நூலில் பயன்படுத்துகிறார் .பின்வரும் விஷயங்களை அவர் இந்நூலில் தெளிவாக விளக்குகிறார் :நீங்கள் தினமும் உங்களுடைய மிக முக்கியமான வேலைகள்மீது மட்டும் கவனம் செலுத்தும் விதத்தில் உங்கள் நாட்களை ஒழுங்கமைத்துக் கொள்வது எப்படி ?மின்னணுக் கருவிகள் உட்பட ஏராளமான விஷயங்கள் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கத் தயாராக இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து ஒருமித்த கவனக்குவிப்புடன் செயல்படுவது எப்படி ?• வெற்றிக்கான மூன்று முக்கியப் பண்புநலன்களான தீர்மானம் மேற்கொள்ளுதல் , ஒழுங்கை வளர்த்துக் கொள்ளுதல் , உறுதியுடன் செயல்படுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வது எப்படி ?• உயர்ந்த செயற்திறனும் , உச்சபட்ச உற்பத்தித்திறனும் , அளப்பரிய ஆற்றலும் கொண்ட ஒரு நபராக ஆவதை நோக்கிய உங்கள் பயணத்தின் வேகத்தை அதிகரித்துக் கொள்வது எப்படி ? .இந்நூலை கவனமாகப் படித்து இதில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்தினால் , உங்கள் நேரமும் உங்கள் வாழ்க்கையும் உங்கள் வசமாகும் என்பது உறுதி !