Showing the single result
-
Add to cart
நீருக்கடியில் சில குரல்கள் / Neerukkadiyil Sila Kuralgal
₹150₹140ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர் , கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன் . புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது . சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது .அதற்கு அவர் தோது பண்ணியிருக்கும் வார்த்தைகள் இயல்பான அவரது புழங்குமொழிதான் . அந்த மொழியே கதைமாந்தர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்பகப்படுத்துகின்றன .வெவ்வேறு ஆண் பருவத்தினரான மூவர் சுற்றிய கதை . அவர்களின் வாழ்வியல் நிலைகளை குறிப்பாக வெவ்வேறு பாலியல் களங்களில் காட்சிப்படுத்துகிறது .கதையில் உலவும் பெண்களின் அபூர்வ வேட்கை பிரபு காளிதாஸின் எழுத்தில் காமலோகத்தை சித்திரப்படுத்தி மலைப்பூட்டுகிறது . மாறுபட்ட சூழலில் பிழைக்கவே .. தப்பிப்பிழைக்கவோ ஓடிக்கொண்டிருக்கும் மூவரும் ஒன்றுகூடுவதுடன் கதை ஓரிடத்தில் நிலைபெறுகிறது .எஸ் . அர்ஷியா