Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நுகத்தடி / Nugathadi

    210 195
    இந்தியாவில் , தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘ நுகத்தடி ‘ நாவல் வந்திருக்கிறது . குமார் என்கிற துப்புரவுத் தொழிலாளியின் பார்வையில் புழுவிலும் கேவலமாக மிதிக்கப்பட்டு வரும் தலித் மக்களின் வாழ்க்கை அவலங்கள் விவரிக்கப்படுகின்றன . காவல் துறையும் , சிறை நிர்வாகமும் சாதாரண உழைக்கும் மக்களை எப்படி ஒடுக்கி அவர்கள் வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதே நாவலின் பிரதான மையம் . தலையில் மலக்கூடைகளுடன் , ஓட்டல்களின் எச்சில் இலைத்தொட்டிகளுக்குள் இறங்கிக் கழிவுகளைத் தோளிலும் , தலையிலும் சுமக்கும் மக்களை , இந்தச் சமூக அமைப்பு எப்படி ஒடுக்குகிறது என்று தோலுரிக்கும் படைப்பு . கலை நயம் , மொழிப்புலமை , இன்னபிற படைப்புத் திறன்கள் பற்றி உபதேசம் செய்பவர்கள் இந்த நாவலைப் படித்துப் பார்ப்பது நல்லது . சலவான் நாவலுக்குப்பிறகு பாண்டியக் கண்ணன் படைத்துள்ள மல நாற்றமும் இரத்தக்கவுச்சியும் வீசும் மாமிசப்படைப்பு .
    கமலாலயன்