Showing all 3 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    சங்ககாலத் தமிழர் உணவு / Cankala Tamizhar Unavu

    100 93
  • SAVE 7%
    Add to cart

    தமிழர் மானிடவியல் / Tamizhar Maanidaviyal

    450 419
    கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள் , மனித நடத்தைகள் , சமூகங்கள் பற்றி அறிவியல்பூர்வமாக ஆய்வது மானிடவியல் , சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும் , பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள் , மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன .
    இந்த நூலில் பக்தவத்சலபாரதி தமிழர் என்னும் இனத்தை மானிடவியல் நோக்கில் ஆராய்கிறார் . இதற்காக ஆதி சமூக முறையையும் பண்டைத் தமிழ்ச் சமூக முறையையும் எவ்வாறு இருந்தன என்பதில் தொடங்கி தாய்வழிச் சமூகம் , சாதி , சமூக மாற்றம் , திருமணம் , சடங்குகள் , தெய்வங்கள் , திருவிழா , கைவினைக்கலை , புழங்குபொருள் , கிராமம் – நகரம் , சென்னைத் தமிழ் போன்றவற்றுடன் சமகாலத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பல்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நமக்குக் காட்சிப்படுத்துகிறார் . இதன் மூலம் இந்த நூல் தமிழர் வாழ்வைப் புறநிலைப்படுத்திப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு கைநூலாகத் திகழ்கிறது ; ஆய்வில் ஈடுபடுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது .
    மானிடவியல் எழுத்துக்கள் என்பன புத்தக வாசிப்பு , மண்வாசிப்பு , மனித வாசிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும் . ஆனால் இந்தத் துறை சார்ந்து தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனித வாசிப்பை நிறைவாகச் செய்யவில்லை . பக்தவத்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக் குறையை நிறைவு செய்கின்றன .
    பேராசிரியர் தொ . பரமசிவன்
    தாய்வழிச் சமூகம் தொடங்கி சமகாலச் சமூகம் வரை தமிழரின் தொன்மை , வாழ்வியல் , பண்பாடு அனைத்தையும் சொல்வதே ‘ தமிழர் மானிடவியல் .
    ‘ பேராசிரியர் சிவசுப்பிரமணியன்
    மானிடவியல் கட்டமைக்கும் மெய்ம்மையின் சிக்கலை அதன் நுட்பங்களோடு இந்த நூல் முன்னிறுத்துகிறது . தமிழ்ச் சமூக அசைவியக்கங்களைப் புரிந்துகொள்ள விழையும் எவரும் சிறிது முயன்றால் இந்த நூலைக் கைவிளக்காகக் கொள்ளலாம் .
    பேராசிரியர் ஆ .இரா .வேங்கடாசலதி
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மலைவாசம் பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள் / Malaivaasam Palangudikalin Panpaattu Sidaivugal

    140 130
    ” மலைவாசம் : பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள் ” எனும் இந்நூல் , பழங்குடிச் சமூகங்களின் பல மேம்பட்ட பண்புகள் சரிந்து கொண்டிருப்பதைக் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளது .
    இன்று பழங்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் என்பது குழு வாழ்விலிருந்து நகர்ந்து தனிமனித்தன்மை மேலோங்குவதும் , ஆண் – பெண் சமத்துவம் என்பது மறைந்து ஆண்மையவாதம் வளர்ந்திருப்பதும் ஆகும் . உலகமயமாக்கல் நன்மை , தீமை இரண்டையுமே அம்மக்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது . இளைஞர்கள் அதன் அடிமைகளாகி இருக்கிறார்கள் . இது இயற்கை சார்ந்த வாழ்க்கை , பண்பாடு , சமூகம் , பொருளாதாரம் , மதவழிபாடு அனைத்திலும் சிதைவுகளை உண்டாக்கியுள்ளது . மத மாற்றமும் , இந்துத்வாமயமாக்கமும் மெல்ல வேரூன்றி வருகிறது என்பதையும் கள ஆய்வில் கண்டறிந்து பதிவு செய்துள்ளனர் .
    முனைவர் பக்தவத்சல பாரதி அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மானிடவியலாளர்களில் ஒருவர் . தமிழகப் பழங்குடிகள் , தமிழகத்தில் நாடோடிகள் , மானிடவியல் கோட்பாடுகள் உட்பட பல தலைசிறந்த நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளவர் .
    பழங்குடி மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும் இந்நூலைப் படித்தால் எத்தகைய தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய விவாதத்தைத் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை . தேவையான காலத்தில் இந்த அரும்பணியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் . பெ.சண்முகம் 1