Showing all 2 results
-
Add to cart
கர்னாடக இசையின் கதை / Karnataka Isaiyin Kadhai
₹175₹163இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள் , எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன . இசையுலகினுள் நிலவும் சாதி , பாலினம் , மொழி , மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா . வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள் , கச்சேரிக்கான கட்டமைப்பு , பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார் . கலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் கொண்டிருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறார் . இசைக்கும் இறைமை நிகழ்களம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார் . கர்னாடக , இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார் . நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார் . இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார் . கிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம் . ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது . அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறையியலை மதிக்காமல் இருக்க முடியாது . இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான் .
-
Add to cart
மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் / Maraikkappatta Mirutankac Cirpikal
₹195₹181ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது ? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள் ? பசு , ஆடு , எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து , ஒத்திசைவுடன் வினையாற்றி , ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது ? ஓசையை உருவாக்குவது யார் ? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தாள கதியை உள்வாங்குவ திலில்லை . தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதை உள்வாங்குகிறார் . அது வெறும் ஓசை அல்ல , வாசிப்பவரின் விரல்களுக்கும் விலங்குகளின் தோல்களுக்கும் இடையிலான உறவு . வாசிப்பவர் ஒவ்வொரு முறை புதிய கருவியில் வாசிக்கும்போதும் அந்தக் கருவிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு உருப்பெறுகிறது . வாசிப்பவர் மிருதங்கத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே மிருதங்கம் செய்பவர் முறுக்குவது , இழுப்பது , திருகுவது , உடைப்பது , நசுக்குவது , கழுவுவது , வெட்டுவது , இணைப்பது ஆகியவற்றைச் செய்து பல்வேறு இழைகளையும் வண்ணங்களையும் வடிவங்களையும் ஒலிகளையும் ஓரிடத்தில் இணைக்கிறார் . மிருதங்கம் செய்பவர் மன்மதன்போல , அவர் இறந்தவற்றையும் உயிரோடு இருப்பவர்களையும் , உயிரற்றதையும் செயற்கையான பொருள்களையும் புரிந்து கொள்பவர் . இவற்றை இணைப்பதற்கான வழியை அவர் கண்டறிகிறார் . அவர் மிருதங்கத்தின் தாளத்தைத் தன் கைகளால் பார்க்கிறார் . அறிகிறார் , உணர்கிறார் . அவர் அதில் முதல் தட்டு தட்டும்போது மிருதங்கம் பிறக்கிறது .