Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஆழ்மனத்தின் அற்புத சக்தி / The Power of Your Subconscious Mind

    199 185
    டாக்டர் ஜோஸப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகின்ற நூலாசிரியர் . அவர் பல ஆண்டுகாலம் இந்தியாவில் தங்கியிருந்து நம்முடைய தத்துவங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார் . உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர் , நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது , அதைக் கொண்டு நம் வாழ்வை பிரமிக்கத்தக்க விதத்தில் நம்மால் மாற்ற முடியும் என்ற அசைக்க முடியாத முடிவிற்கு வந்தார் .
    உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் பல நிகழட்டும் !
    இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்றப் புத்தகங்களிலேயே மிகப் பரவலாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது . உலகெங்குமுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவியுள்ளது .
    நீங்கள் எந்தவொரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும் , எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து , அதை உங்கள் னத்திரையில் படமாகப் பதிய வைத்தால் , உங்களால் உங்கள் ஆழ்மனத் தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும் .
    வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிரம்பியுள்ள இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய நடைமுறை உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் , உங்களால் அளவற்ற செல்வத்தைக் குவிக்க முடியும் , நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வைப் பெற முடியும் , அனைவருடனும் இணக்கமான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும் , உங்களது திருமண பந்தத்தை என்றென்றும் இனிமையாக வைத்திருக்க முடியும் . உங்களிடம் உறைந்திருக்கும் அர்த்தமற்ற பயங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியும் , ஒவ்வொரு வைகறையிலும் உங்களால் புத்துணர்ச்சியுடன் துயிலெழ முடியும் , வேண்டாத விருந்தாளிகளாய் உங்களுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எல்லா உடல் உபாதைகளையும் விரட்டியடிக்க முடியும் .
    டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான , சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ள , வாழ்வில் சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய எளிய உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால் , உங்களுக்கும் உங்கள் மாபெரும் கனவிற்கும் குறுக்கே நிற்கும் மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உங்களாலும் வெற்றிநடை போட முடியும் .