Showing 1–16 of 50 results
-
Add to cart
அந்த முகில் இந்த முகில் / Antha Mugil Intha Mugil
₹250₹233இந்தக்கதை நான்அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம் . அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை . எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன . நுரைக்காத தருணமே இல்லாத கதை , பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு . அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு . கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது . ஒரு காதல்கதை . இழந்த காதலின்அல்லது இழக்க முடியாத காதலின் கதை .
-
Read more
அபிப்பிராய சிந்தாமணி / Abippiraya Sinthamani
₹900₹837இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள் , நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன . இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல . பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன . தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன . கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது .
-
Add to cart
ஆயிரம் ஊற்றுகள் / Ayiram Uttrugal
₹210₹195இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை . அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் சய்கின்றன . மான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை . இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம் . நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம் . வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது . ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே . அவர்களில் பலர் அரசியர் , இந்த கதைகள் வரலாற்றை இன்றைய நவீன ஜனநாயகப் பார்வையில் உருவாக்கிக் காட்டுகின்றன .
-
Read more
இன்றைய காந்தி / Indraya Gandhi
₹490₹456இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் , பின்நவீனத்துவ காலகட்டத்தில் , மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில் , என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது . காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம் .காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும் இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார் . காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார் . காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார் . பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது .உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும் . -
Add to cart
இலக்கியத்தின் நுழைவாயிலில் / Ilakiyathin Nuzhaivaiyil
₹160₹149இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை , கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று . ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது . பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது . இலக்கியத்தின் கொள்கைகள் , செயல் முறைகளைத் தெளிவுபடுத்துகிறது .