Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கனவுகள் ஓடும் நாளங்கள் / Kanavugal Odum Nalangal

    140 130

    ஒவ்வொரு படைப்பாளிக்கும் அகம் உணரும் தருணம்தான் படைப்பின் உச்சம் , வாழ்வின் உச்சமும் கூட . தன்னை மட்டுமல்லாமல் மறு இதயங்களின் வலியையும் மென் உணர்வுகளையும் உணரும்போது ஒரு சாமானியன் படைப்பாளியாகிறான் ஜானு பல கவிதைகளில் அப்படியான நொடிகளை தாண்டிச் செல்கிறார் . இடறி விழுந்த பறவையின் காயத்தை மயிலிறகென வருடித் தேற்ற பறவையின் பாஷை தெரிந்திருக்க வேண்டியதில்லை , வலி உணரும் மனம் போதும் என்று நம்மை உணர வைக்கும் ஜானுவின் எழுத்துக்கள் பெண்ணியக்குரலின் வறட்சியற்று அதே சமயம் தன் நிலைபாட்டை உறுதியாய் பதிவு செய்கிறது . உங்கள் தேவதைப் பட்டங்கள் எனக்கு வேண்டாம் , என் சிறகுகளே போதும் என்று நம்பிக்கையும் தெளிவும் துளிர்க்க பேசுகிறார் . ஜானு , நிச்சயமாக இனி வரும் நாட்களில் உங்களின் அதி தீவிரமான கவிதைகளை நீங்கள் பதிவு செய்யக்கூடும் . அதற்கான எல்லா துளிர்களும் உங்களின் மரத்தில் துளிர்க்கத் தொடங்கிவிட்டன . இனி வருவது வசந்த காலமே . அதன் வழி வீசும் குளிர்க் காற்றை சுவாசிக்க நானும் காத்திருக்கிறேன் .