Showing all 8 results
-
Read more
அன்பின் சிப்பி / Anbin Sippy
₹130₹121கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது . பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள் , அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன .இந்தத் தொகுப்பில் உள்ள சோ . தர்மனின் புனைகதைகள் சித்திரிக்கிற கரிசலை மையமிட்ட கதையாடல்கள் , அறத்திற்கு எதிரானவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களைக் கிராமத்தினரின் பேச்சுகளில் , நாட்டார் கதைமரபில் சொல்கிறது .கதைசொல்லியான தர்மன் , எந்த இடத்திலும் தனது அபிப்ராயத்தை முன்வைக்காமல் விலகி நிற்கிறார் . முடிவற்ற கதைகளின் மூலம் உயிர்த்திருக்கிற கிராமத்தினரின் வாழ்க்கையில் அறமற்றவை நிச்சயம் அழியும் என்ற நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரமா என்ற கேள்வி சோ . தர்மனின் படைப்புகளில் துல்லியமாக வெளிப்படுகிறது .கரிசல்மண் சார்ந்து சோ . தருமன் புனைகிற எழுத்துகள் , அசலான தன்மையில் இருத்தல் குறித்த கேள்விகளை முன்வைக்கின்றன . ஒருபோதும் முடிவற்ற கதைகளின் உலகில் , தனக்கான முத்திரையை அழுத்தமாகப் பதிப்பதில் சோ . தருமன் தனித்து விளங்குகிறார் . -ந . முருகேசபாண்டியன் -
Read more
கூகை / Kookai
₹300₹279கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை . மிகுந்த வலிமை கொண்டது . எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை . இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது . பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும் . கூகையின் தோற்றத்தை அருவருப்பாகப் பார்ப்பதும் , கோரம் என்று முத்திரை குத்துவதும் , கூகையைக் . காணுதலையும் அதன் குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும் இந்தச் சமூகத்தில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் . பொதுப்புத்தி . கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி , சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றிகண்டிருக்கிறார் சோ . தர்மன் .
-
Read more
தூர்வை / Thoorvai
₹230₹214தூர்வை , இரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு – வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை , அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் , சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல் .‘ தூர்வை , அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக்குரல் , எதிர்ப்புக்குரல் … தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது . வரலாற்றின் ஒரு பரிமாணம் . வெகு தீர்மானமான அமைதியான குரல் . இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக , உண்மைக்குச் சாட்சியாக , மனசாட்சியின் குரலாக , இப்படிப் பல பரிமாணங்களில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது .வெங்கட் சாமிநாதன் -
Read more
பதிமூனாவது மையவாடி / Pathimoonaavathu Mayyavaati
₹320₹298கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது . ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட . உடலை , காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல் . அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி : ” சீயோன் குமாரத்தியே , கெம்பீரித்துப்பாடு . இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள் . எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு . உன் ஆக்கினைகளை அகற்று . திறந்த உடலைக் களிப்பாக்கு .இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும் . பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல் , பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது . இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘ சமநிலையை பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள் . சோ . தர்மன் , ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘ வெள்ளந்தித்தனத்துடன் நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார் . ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஓட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார் .கருத்தமுத்து ஒரு ஆணாக , குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது . நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான் . ஒன்று கல்வி , இன்னொன்று மதம் , இணையாகவே காமம் , ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான் . இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான் .ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப் பரப்பு இது .– ஜெயமோகன்