Showing all 5 results
-
Add to cart
எதிர்ப்பிலேயே வாழுங்கள் / Ethirpillaye Vazhungal
₹190₹177ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன் , அவரை அழைத்து , ” உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது . நீ அதை எப்படி வாழப் போகிறாய் ? ” என்று கேட்டான் .இதைக் கேட்டு சிரித்தவாறு துறவி சொன்னார் , “ எப்பொழுதும் வாழ்வது போல – கணத்துக்கு கணம் ! என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கணத்துக்கு மேலே எதுவும் கிடையாது . ஆகவே எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? இதில் எந்த வித்தியாசமும் இல்லை . நான் எப்போதுமே கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால் , இந்தக் கணமே எனக்கு அதிகம்தான் . 24 மணி நேரம் என்பது எனக்கு மிக அதிகம் ; இந்த ஒரு கணமே போதும் ! ” . -
Add to cart
கண்ணன் அருளிய பகவத் கீதை / Kannan Arulia Bhagawat Geethai
₹100₹93முதலில் கண்ணன் மனிதனா , தெய்வ புருஷனா என்ற சந்தேகத்தை இந்நூல் தெளிய வைக்கிறது . மனிதனாகப் பிறவி எடுத்து , மனித இயல்புகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஒரு தெய்வ புருஷனே கண்ணன் என்பதைக் கீதை உணர்த்துகிறது .மனிதனின் உணவு வகைகளில் இருந்து , வாழ்க்கை முறை வரை அனைத்தையும் ஒப்புக்கொண்டு பங்கீடு செய்துகாட்டி , இதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தெளிவுபடுத்தி , இகத்திலேயே ஜீவாத்மாவைப் பரமாத்வாக்க முயல்கிறான் கண்ணன் .ரத்த பாசத்தில் இருந்து , யுத்த தர்மம் வரை போதிக்கிறான் . தொழில் செய்வதில் இருந்து தொழிலைத் துறப்பது வரை விளக்குகிறான் . நித்திய கர்மங்களிலிருந்து சத்திய தர்மம் வரை தெளிவுபடுத்துகிறான் .அவன் வேதாந்தம் மட்டும் பேசவில்லை ; சித்தாந்தம் பேசுகிறான் ; மருத்துவம் கூறுகிறான் . மனோதத்துவம் சொல்கிறான் . எங்கெங்கோ பறக்கும் எல்லாப் பறவைகளுக்குமான சரணாலயம் , ‘ ஈஸ்வரனே ‘ என்பதை ‘ நானே ‘ என்று முடிக்கிறான் .சில இடங்களில் ‘ நான் ‘ என்பதை விட்டுவிட்டு , ‘ ஈஸ்வரன் ‘ ‘ பரம்பொருள் ‘ என்ற வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறான் .ஆகவே கண்ணன் ‘ கடவுளா ? மனிதனா ? ‘ என்ற கேள்வி எழுந்தால் , இரண்டுக்கும் பாலம் என்பது இந்த நூலின் மூலம் உறுதியாகிறது . -
Add to cart
மனவாசம் / Manavasam
₹165₹153வனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை .உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன் . மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா ? ‘ சுயசரிதம் ‘ எழுதும்போது அதில் நான் கற்பனைகளைக் கலப்பதில்லை . கூடுமானவரை சொல்ல வேண்டியவை அனைத்தையும் சொல்லிவிடுவேன் .இந்த மனவாசம் 1961- ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது . இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப்போன விஷயங்களைச் சொல்வேன் .நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல் . நான் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்துவிட்டேன் .என்னைப் பிறரும் கெடுத்து , நானும் கெடுத்துக்கொண்ட பிறகு , மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள் .இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் … எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் … ?