Showing the single result
-
Add to cart
வாழ்வு… இறப்பு… வாழ்வு… / Vazhvu…Irappu…Vazhvu…
₹180₹167ஆய்வுப்பணிகளில் தான் சந்திக்க நேர்ந்த பல்வேறு தடை களைத் தாண்டி மானுடத்திற்கு லூயி பஸ்தேர் அளித்த அறிவியல் கொடைகள் பல .” நுண்ணுயிரியலின் தந்தை ” என்று கொண்டாடப்படும் பஸ்தேர் அவர்களின் ஆய்வின் பலனாகவே பாலுக்குப் பாதுகாப்பளிக்கும் “ பாஸ்டராக்கம் ” அறிமுகமானது .பெப்ரீன் நோயின் பாதிப்பிலிருந்து பட்டு உற்பத்தி மீட்கப்பட்டது . வெறிநாய்க்கடிக்கான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது . இவையெல்லாம் பஸ்தேரின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும் .ஆய்வுக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்த இத்த கைய அற்புத மனிதரின் வாழ்க்கையினை ஆய்வு செய்துள் ளார் எரிக் ஒர்சேனா .பஸ்தேரை உருவாக்கிய பெற்றோர் , அவர் தம் ஆய்வுப் பணியில் அயராது துணை நின்ற தியாக வடிவான மனைவி மரி . நோயின் தாக்குதலுக்கு இளமையிலேயே இரையான அவருடைய மகள்கள் , ஆயிரம் கருத்து வேற்றுமை இருப்பினும் பஸ்தேரின் திட்டங்களை நிறை வேற்ற உதவிய அறிவார்ந்த உதவியாளர்கள் எனப் பலர் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர் .பஸ்தேரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான கட்டங் களை அறியும் ஆர்வமுடன் நூலை வாசிக்கத் தொடங் கும் நாம் , இறுதியில் அந்த மாமேதையுடன் சில நாட்கள் வாழ்ந்த அனுபவத்தைப் பெறுகிறோம் . வாழ்க்கை வரலாற்று நூலினையும் விரும்பி வாசிக்கும் வண்ணம் சுவைபட வழங்க முடியும் என எரிக் ஓர்சேனா நிறுவியுள்ளார் .