Showing all 2 results
-
Add to cart
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945) / Frenchiyar Aatchiyil Pudhucherry Nadum Panpadum (1815-1945)
₹360₹335பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கிழ்த்திசைக் காலனியாக்கப் பயணம் , பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது . தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு , பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது . அதற்கேற்பட மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின . ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது . மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது . ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை , இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது . அந்தக் காலகட்டத்தில் , புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள் , தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும் , அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள் , தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும் , பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய் , பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும் , வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும் , ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல் .
-
Add to cart
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி மண்ணும் மக்களும் (1674-1815) / Frenchiyar Kaala Pudhucherry Mannum Makkalum (1674-1815)
₹390₹363பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் , அயலகத்தில் வணிக முயற்சிகள் , அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல் , ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம் , பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது . இந்தியச் சிற்றரசர்களை அணி சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில் , இடையில் சில வெற்றிகள் கிடைத்தாலும் , மூன்று கர்நாடகப் போர்களின் முடிவில் தோல்வியே மிஞ்சியது . இறுதியில் வென்றவர் ஆங்கிலேயரே . ஐதர் அலி , திப்பு கல்தானுடன் கூட்டணி அமைத்தும் வெற்றிபெற முடியவில்லை ; பல இந்தியப் போர்களின் முடிவில் வெற்றியின் விளிம்பில் ஃபிரான்சு நின்றபோதிலும் , ஐரோப்பியப் போர்களின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தங்களால் வெற்றிவாய்ப்புகள் கை நழுவிப்போயின . இறுதியில் ஆங்கிலேயரால் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டபோது , பாரிஸ் ஒப்பந்தம் காரணமாகவே ஃபிரஞ்சிந்தியப் பகுதிகள் ஃபிரான்சுக்குத் திரும்பக் கிடைத்தன . ஆயினும் , புதுச்சேரிப் காலனி வேட்டை முற்றுப்பெற்றது . பிரதேசத்தைத் துண்டுதுண்டாக்கியே திருப்பித் தந்தனர் , அத்துடன் ஃபிரான்சின் கத்தோலிக்கக் கிறித்தவ சமயப் பரப்பாளர்கள் , ஆட்சியரின் துணையுடன் இந்தியச் மந்தமாகவே தொடர்ந்தது . சமூகத்தின்மீது தொடுத்த உளவியல் , உடலியல் தாக்குதல்களால் , மதமாற்றம் சற்று இந்த நெடிய ஆதிக்கப்போரில் இரு தரப்பிலும் , கையாண்ட உத்திகள் , கண்ட போர்க்களங்கள் , பாடைக் காய்களாக உருட்டப்பட்ட இந்தியச் சிற்றரசர்களின் இந்நூல் பயணிக்கிறது . இயலாமை , போர்க்காலங்களில் பாமர மக்கள் அனுபவித்த கொடுமைகள் , அவர்களை ஆட்டிப்படைத்த ஐரோப்பிய ஆளுமைகளின் சதிராட்டங்களின் ஊடாக இந்நூல் பயணிக்கிறது.