Showing all 5 results
-
Read more
இரண்டாம் இடம் / Irandam Idam
₹190₹177‘ ஞானபீடம் ‘ விருது பெற்ற ‘ இரண்டாம் இடம் ‘ என்னும் இந்த மலையாள நாவல் ‘ கங்குலுயின் பாரதம் ‘ மற்றும் ‘ ஜெயம் ‘ என்னும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும் . அபரிமித கற்பனையையும் , மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து , மனித குண இயல்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களைப் படைத்து , பீமனின் பார்வையில் , பீமனே சொல்வது போல் , வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்புத் தன்மையாகும் . இதுவரையில் படித்துள்ள மகாபாரதக் கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபாடுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம் .மலையாள மொழியின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.டி. வாசுதேவன் நாயர் இதன் ஆசிரியர் . சாகித்திய அகாதெமி விருது , கேரள சாகித்திய அகாதெமி விருது , ஞானபீட விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர் . மலையாள வார இதழான ‘ மாத்ருபூமி’யின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் . தற்போது கேரள சாகித்திய அகாதெமியின் தலைவராக இருந்து வருகிறார் . ‘ காலம் ‘ , நாலு கட்டு ‘ , ‘ அகர வித்து ‘ போன்ற சிறந்த நாவல்களைப் படைத்தவர் . பெருந்தச்சன் ‘ , ‘ ஒரு வடக்கன் வீர சுதா ‘ போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்து இயக்கியவர் .குறிஞ்சிவேலன் சுமார் 35 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணிச் செய்து வருகிறார் . 20 நூல்களுக்கு மேல் மலையாள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார் . எஸ்.கே. பொற்றெக்காட்டின் ‘ விஷ கன்னி ‘ என்னும் நாவலை மொழியாக்கம் செய்தமைக்காக 1994 – ம் ஆண்டில் மொழியாக்கத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் . பல இலக்கிய அமைப்புக்களின் பாராட்டுக்களையும் , விருதுகளையும் பெற்றவர் . -
Read more
இறுதி யாத்திரை / Iruthi Yathirai
₹150₹140வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் . அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது . புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை . மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது . எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது . அதன் அப்பழுக்கற்ற , பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . காலம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்.டி.வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார் . ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன ?
-
Read more
நாலுகெட்டு / Naalukettu
₹325₹302– எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘ நாலுகெட்டு ‘ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது . எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவணமாகவும் திகழ்கிறது .அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்தின் அக , புற சஞ்சாரங்கள்தாம் நாவலின் கதையோட்டம் . மருமக்கள்தாய முறையின் தூல வடிவமான நாலுகெட்டுத் தறவாட்டுக்குள் கூட்டுக் குடும்பத்துக்குள் – நிகழும் உறவு மோதல்களையும் அதிகாரச் சிக்கல்களையும் பின்புலமாகக் கொள்கிறது . அதன் விரிவாக நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டுகிறது . இந்த இயல்புகளால் கேரளத்தின் ஒரு பகுதியின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது .‘ நாலுகெட்டு ‘ சமகால மலையாள நாவல் கலையின் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது . இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதுடன் பதினான்கு மொழிகளில் பெயர்க்கவும் பட்டுள்ளது .மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுஃப்