Showing the single result
-
Read more
கௌரவன் 2 / Gowravan 2
₹599₹557நாமறிந்த போரில் மகாபாரதம் , குருச்சேத்திரப் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை எல்லா நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த வழிகளிலும் தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் கௌரவன் ‘ துரியோதனன் , .பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது . குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பானரான பீஷ்மர் , தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் . பார்வையற்ற திருதராஷ்டிரன் , அந்திய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரச பீடத்தில் அமர்ந்திருக்கிறான் . இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி , தன் மூத்த மகன் தர்மனை அரியணையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள் .இக்குழப்பங்களுக்கு நடுவே ஒரே ஒருவன் மட்டும் உறுதியுடன் நெடிதுயர்ந்து நிற்கிறான் . தன் மனசாட்சிப்படி நடக்க முயனும் பட்டத்து இளவரசனான துரியோதனன்தான் அவன் . தனக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அரியணைக்காகத் தன் ஒன்றுவிட்டச் சகோதரர்களுடன் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தன்னப்படுகின்ற அவன் , அதர்மங்கள் , அநீதிகள் , சூழ்ச்சிகள் , சதிகள் ஆகியவற்றை அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்கிறது .அதே அஸ்தினாபுர அரண்மனைத் தாழ்வாரங்களில் , பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஓர் அந்திய நாட்டு இளவரசனான சகுனி . அவன் உருட்டிய பகடைகள் எப்படி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தன என்பதை இந்நூலின் முதல் பாகத்தில் நாம் பார்த்தோம் .இந்த இரண்டாம் பாகத்தில் :போர் மேகங்கள் வெகுவேகமாகச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன .தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய விவாதங்கள் சூடாக நடைபெறுகின்றன .அதிகாரப் பசி கொண்ட ஆண்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கப் போகின்ற ஒரு போருக்குத் தயாராகின்றனர் .பெண்களும் பிராமணர்களும் தங்கள் கண்முன்னால் கட்டவி கொண்டிருக்கின்ற பேரழிவைப் பெரும் அச்சத்துடனும் கையாலாகாத்தனத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .பேராசைமிக்க வணிகர்களும் சூழ்ச்சிகரமான புரோகிதர்களும் கழுகுகன்போலக் காத்துக் கொண்டிருக்கின்றனர் .தன் பங்குக்கு ஓர் ‘ அவதாரமும் ‘ சளைக்காமல் சதி செய்து கொண்டே இருக்கிறது .இருண்ட கலிகாலம் உதயமாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையேயும் , கௌரவத்திற்கும் அவமானத்திற்கும் இடையேயும் , உயிர்பிழைத்திருத்தலுக்கும் சாவுக்கும் இடையேயும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர் .