SAVE 7%
Out of Stock

மகாபாரதம் / Mahabharatam

300 279

பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை . அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் , பாண்டவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார் . பலராலும் வஞ்சிக்கப்பட்ட கர்ணனை அனுதாபத் துடன் பார்க்கிறார் . அதேசமயம் , கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . குந்தி , காந்தாரி , மாத்ரி , சத்யபாமா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார் . பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை வெளிப்படுத்துகிறார் . போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச் சொல்கிறார் . கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக ஆராய்கிறார் . கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும் புரியவைக்கிறார் . அர்ச்சுனன் , சாத்யகி , அசுவத்தாமன் , குந்தி , பலராமன் முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில் பேசுகிறார் . வியாசரின் படைப்புத் திறனையும் தத்துவப் பார்வையையும் பிரமிப்புடன் பார்க்கிறார் . இந்த நூலைப் படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம் .
அரவிந்தன்
இந்து தமிழ் நாளிதழ் – மதிப்புரை .

Out of stock

Additional information

WEIGHT

0.383

AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789382648888

NO OF PAGES

344

PUBLISHED ON

2014

PUBLISHER NAME